மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம் – பண்டாரநாயக்க மாவத்தை, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
ஆறு திருமுகங்கள் கொண்டு அருளுகின்ற பெருமானே
ஆறுதலைத் தந்தெம்மை ஆட்கொள்ள வருவாய் ஐயா
அஞ்சும் நிலை இல்லா நிலை அருளிடவே வேண்டுமைய்யா
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
அச்சம் அகற்றியெம்மை அரவணைக்கும் பெருமானே
நல்லறிவு தந்தெம்மை வாழவைக்க வருவாய் ஐயா
உறுதி மனம் தந்து அருளிடவே வேண்டுமைய்யா
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
தீயவர்கள் தரும் கொடுமை துடைத்தெறிய வருவோனே
தூய நல்ல வாழ்வு தந்து ஆட்கொள்ள வருவாய் ஐயா
தொல்லையண்டா நிலை தந்து அருளிடவே வேண்டுமைய்யா
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
வருந்தி நிற்போர் துயர்களைய விரைந்தெழுந்து வருவோனே
வாட்டமில்லா வாழ்வு தந்து ஆட்கொள்ள வாருவாய் ஐயா
வீண் சுமைகள் அகற்றி அருளிடவே வேண்டுமைய்யா
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
துவண்டு நிற்போர் மனங்களிலே எழுந்தருளும் பெருமானே
துணிவு தந்து அரவணைத்து ஆட்கொள்ள வருவாய் ஐயா
தோல்வியில்லா வாழ்வு தந்து அருளிடவே வேண்டுமைய்யா
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
தெய்வ மகள் இருவரையும் அருகு கொண்ட பெருமானே
திசையெங்கும் அருள்பரப்பி ஆட்கொள்ள வருவாய் ஐயா
தடையில்லா வாழ்வினையே அருளிடவே வேண்டுமைய்யா
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே.