கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம், திருகோணமலை அருள்மிகு திருக்கோணேசுவரம் திருக்கோயில்
குன்றின் மேல் கோயில் கொண்டு குவலயம் காக்கும் ஐயா
குறையில்லா நிறை வாழ்வை உலகினிற்கு தந்திடைய்யா
நீயுறையும் உன் கோயில் எங்களது இதயமைய்யா
நம்பியடி பணியும் எங்களை நீ அரவணைப்பாய்
அலைமோதும் பெருங்கடலின் அருகமர்ந்து அருளும் ஐயா
அன்பு நிறை உயர்வாழ்வை உலகிற்குத் தந்திடைய்யா
கருணைமிகு உன் கோயில் எங்களது இதயமைய்யா
நம்பியடி பணியும் எங்களை நீ அரவணைப்பாய்
கௌரியம்மை அருகுகொண்டு அருள் பொழியும் ஐயா
காவல் நிறை நல்வாழ்வை உலகிற்குத் தந்திடைய்யா
தமிழ் மணக்கும் உன் கோயில் எங்களது இதயமைய்யா
நம்பியடி பணியும் எங்களை நீ அரவணைப்பாய்
திருகோணமலை யமர்ந்து காட்சி தரும் ஐயா
தித்திக்கும் நிம்மதியை உலகிற்குத் தந்திடைய்யா
தூய்மை கொண்ட உன் கோயில் எங்களது இதயமைய்யா
நம்பியடி பணியும் எங்களை நீ அரவணைப்பாய்
பாபநாசம் தீர்த்தமாடி கருணை தரும் ஐயா
பாவங்கள் அண்டாநிலை உலகினிற்குத் தந்திடைய்யா
புண்ணியர்கள் போற்றுகின்ற உன் கோயில் எங்களது இதயமைய்யா
நம்பியடி பணியும் எங்களை நீ அரவணைப்பாய்
தேரேறிப் பவனிவந்து திருவருளை வழங்கும் ஐயா
தோல்வி நிலை அண்டாநிலை உலகினிற்குத் தந்திடைய்யா
தொன்மைமிகு உன் கோயில் எங்களது இதயமைய்யா
நம்பியடி பணியும் எங்களை நீ அரவணைப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.