கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – தம்பலகாமம் – அருள்மிகு ஆதி கோணநாயகர் திருக்கோயில்
அறம் காத்து அருளளிக்கும் ஐயனே சிவனே
அச்சமற்ற நிம்மதியை எமக்கருள வேண்டும்
நிம்மதியை நிலையாக காத்தருள வருவாய்
தம்பலகாமம் கோயில் கொண்ட ஆதி கோணநாயகப் பெருமானே
ஆறுதலைத் தந்தெம்மை அரவணைக்கும் சிவனே
ஆதரவைத் தந்து அணைத்தருள வேண்டும்
அஞ்சாமை தந்தெம்மை ஆட்கொள்ள வருவாய்
தம்பலகாமம் கோயில் கொண்ட ஆதி கோணநாயகப் பெருமானே
வளம் கொழிக்கும் தமிழ் மண்ணில் இருந்தருளும் சிவனே
வற்றாத கருணையினை எமக்கருள வேண்டும்
வேதனைகள் களைந்தெம்மை அணைத்தருள வருவாய்
தம்பலகாமம் கோயில் கொண்ட ஆதி கோணநாயகப் பெருமானே
கிழக்கிலங்கை வீற்றிருந்து எமையாளும் சிவனே
கிலேசமில்லா திடவாழ்வை எமக்கருள வேண்டும்
குற்றங்கள் போக்கியெம்மை காத்தருள வருவாய்
தம்பலகாமம் கோயில் கொண்ட ஆதி கோணநாயகப் பெருமானே
குளக்கோட்டன் திருப்பணிகள் பெற்றிட்ட சிவனே
குறையில்லா நிறை வாழ்வை எமக்கருள வேண்டும்
நிறைகுணங்கள் தந்தெம்மை வளமளிக்க வருவாய்
தம்பலகாமம் கோயில் கொண்ட ஆதி கோணநாயகப் பெருமானே
மருதநிலச் சூழலிலே வந்துறையும் சிவனே
மாண்பு நிறை வாழ்வினையே எமக்கருள வேண்டும்
முன்னேறும் வழி காட்டியெம்மை வாழச் செய்ய வருவாய்
தம்பலகாமம் கோயில் கொண்ட ஆதி கோணநாயகப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.