வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், காரைநகர், மணற்காடு அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
அலைகடல் சூழ் பெருந்தீவில் கோயில் கொண்ட தாயே
அணைத்தெம்மை ஆதரிக்க உன்கருணை வேண்டும்
துன்பங்கள் அண்டாமல் துடைத்தெறிய வருவாய்
மணற்காட்டில் இருந்தருளும் எங்கள் தாயே முத்துமாரி
ஆறுதலைத் தந்தெம்மை ஆட்சி செய்யும் தாயே
அச்சமின்றி வாழும் வழி எமக்கருள வேண்டும்
நோய் நொடிகள் நெருங்காமல் துடைத்தெறிய வருவாய்
மணற்காட்டில் இருந்தருளும் எங்கள் தாயே முத்துமாரி
இன்ப நிலை தந்தெம்மை வாழவைக்கும் தாயே
இணையில்லா பேருவகை எமக்கருள வேண்டும்
அவலங்கள் அண்டாமல் துடைத்தெறிய வருவாய்
மணற்காட்டில் இருந்தருளும் எங்கள் தாயே முத்துமாரி
காரைநகர் காட்சி தந்து காவல் செய்யும் தாயே
காலமெல்லாம் நன்மைகளை எமக்கருள வேண்டும்
கொடும் பகைமை அண்டாமல் துடைத்தெறிய வருவாய்
மணற்காட்டில் இருந்தருளும் எங்கள் தாயே முத்துமாரி
பெருமை மிகு தமிழ் நிலத்தில் உறைகின்ற தாயே
பொறுமையுடன் வாழும் வகை எமக்கருள வேண்டும்
பொறாமை எமை அண்டாமல் துடைத்தெறிய வருவாய்
மணற்காட்டில் இருந்தருளும் எங்கள் தாயே முத்துமாரி
நம் தமிழர் வாழ்வுக்கு உயிரூட்டும் தாயே
நிம்மதியுடன் வாழும் வழி எமக்கருள வேண்டும்
அஞ்சும் நிலை அண்டாமல் துடைத்தெறிய வருவாய்
மணற்காட்டில் இருந்தருளும் எங்கள் தாயே முத்துமாரி.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.