Kovil

மொனராகலை, கதிர்காமம் செல்லக்கதிர்காமம்- அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

ஊவா மாகாணம் – மொனராகலை மாவட்டம், கதிர்காமம் செல்லக்கதிர்காமம்- அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

மாணிக்க கங்கை மத்தியிலே கோயில் கொண்ட பிள்ளையாரே
மாநிலத்தில் நல்லமைதி காத்திடவே வேண்டுமைய்யா
மாசற்ற நல்லருளை நாளும் நாம் பெற்றுவிட அருள் தருவாய் செல்லக் கதிர்காமத்திலுறை பிள்ளையாரே பெருமானே

தெளிவான அறிவு தந்து வழிகாட்டும் பிள்ளையாரே
திக்கெட்டும் உன்னருளை ஈந்திடவே வேண்டுமைய்யா
திகட்டாத கருணையினை நாளும் நாம் பெற்றுவிட
அருள் தருவாய் செல்லக் கதிர்காமத்திலுறை பிள்ளையாரே பெருமானே

அருள் பொழியும் திருமுகத்தை உடையவரே பிள்ளையாரே
அச்சமில்லா நிம்மதியே நிலவிடவே வேண்டுமைய்யா
நிறைவான பேரருளை நாம் பெற்று உயர்ந்துவிட
அருள் தருவாய் செல்லக் கதிர்காமத்திலுறை பிள்ளையாரே பெருமானே

துன்பம் களைந்தெமது துயர் போக்கும் பிள்ளையாரே
துணை தந்து காவல் செய்து காத்திடவே வேண்டுமைய்யா
தெளிவான வழி சென்று நல்லுயர்வு பெற்றுவிட
அருள் தருவாய் செல்லக் கதிர்காமத்திலுறை பிள்ளையாரே பெருமானே

திடமான மனவுறுதி தந்தருளும் பிள்ளையாரே
தொல்லையில்லா நிறைவாழ்வு தந்திடவே வேண்டுமைய்யா
நிலையான உன் கருணை பெற்று நாம் மகிழ்ந்திடவே
அருள் தருவாய் செல்லக் கதிர்காமத்திலுறை பிள்ளையாரே பெருமானே

அகிலமெல்லாம் நிறைந்திருக்கும் நாயகனே பிள்ளையாரே
அஞ்சாநிலை தந்தெமக்கு அருள் தரவே வேண்டுமைய்யா
எழுச்சி மிகு உன் கருணை எமையென்றும் அணைத்திடவே
அருள் தருவாய் செல்லக் கதிர்காமத்திலுறை பிள்ளையாரே பெருமானே.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top