ஊவா மாகாணம் – பதுளை மாவட்டம், பிட்டமாறுவ, ரோபேரி குரூப், எலமான் பிரிவு அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்
வளங்கொண்ட மலையகத்தில் இருந்துறையும் வேலவனே
வற்றாத நல்லருளை நாம் பெறவே அருளிடைய்யா
வாழ்க்கையை நேர்வழியில் நாம் அடைய உதவிடைய்யா
பிட்டமாறுவ கோயில் கொண்ட பெருமானே கதிர்வேலா
புகழ் மணக்க அருளளிக்கும் உமை மகனே வேலவனே
பெருமைமிகு உயர்வாழ்வை நாம்பெறவே அருளிடைய்யா
போதுமென்ற மனநிறைவை நாமடைய உதவிடைய்யா
பிட்டமாறுவ கோயில் கொண்ட பெருமானே கதிர்வேலா
குவலயத்தில் குற்றங்குறை போக்குகின்ற வேலவனே
குன்றாத கௌரவத்தை நாம் பெறவே அருளிடைய்யா
கெடுதியில்லா நல்வாழ்வை நாம் பெறவே உதவிடைய்யா
பிட்டமாறுவ கோயில் கொண்ட பெருமானே கதிர்வேலா
மயில் மீது அமர்ந்திருந்து அருள் பொழியும் வேலவனே
மாசற்ற நல்வாழ்வை நாம் பெறவே அருளிடைய்யா
மனவுறுதி என்றுமே நாம் பெறவே உதவிடைய்யா
பிட்டமாறுவ கோயில் கொண்ட பெருமானே கதிர்வேலா
நிறை வாழ்வு தந்தெம்மை ஆட்கொள்ளும் வேலவனே
நித்திய நிம்மதியை நாம் பெறவே அருளிடைய்யா
நோயில்லா நல் வாழ்வை நாம் பெறவே உதவிடைய்யா
பிட்டமாறுவ கோயில் கொண்ட பெருமானே கதிர்வேலா
குன்றினிலே குடியமர்ந்து பாராளும் வேலவனே
குறைவில்லா நிறைவாழ்வை நாம் பெறவே அருளிடைய்யா
கொடுமனது கொண்டோரின் கொட்டத்தை அடக்கி உதவிடைய்யா
பிட்டமாறுவ கோயில் கொண்ட பெருமானே கதிர்வேலா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.